டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் முசெட்டி 7-5, 7-6 ( 7-3) என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே ஜோகோவிச், ரூப்லெவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story