என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    திமுகவின் நிறைவேறாத சில வாக்குறுதிகளுக்கு மத்திய அரசே காரணம் - மதிமுக மாநாட்டில்  வைகோ பேச்சு
    X

    திமுகவின் நிறைவேறாத சில வாக்குறுதிகளுக்கு மத்திய அரசே காரணம் - மதிமுக மாநாட்டில் வைகோ பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
    • 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும்.

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் நேற்று (செப். 15) மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இதில் 2025 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு உழைப்பது, தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி என்ற பாஜக சதியை முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    மாநாட்டில் பேசிய வைகோ, எந்தத் தடையையும் பொருட்படுத்தாது மதிமுக பயணித்துக்கொண்டே இருக்கும். ஸ்டெர்லைட் ஆலையை போராடி விரட்டியடித்த இயக்கம் மதிமுக. டாக்டர் அம்பேத்கர் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்துவைக்க காரணமாக இருந்தது மதிமுக.

    முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டது. கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மத்திய அரசு இடையில் நிற்பதுதான் காரணம்.

    2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும்" என்று பேசினார்.

    Next Story
    ×