தமிழ்நாடு செய்திகள்

தந்தை பெரியாரின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை- உறுதிமொழி ஏற்பு
- தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு.
தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அங்கு, சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார்.
பெரியாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் நிலையில் உறுதி மொழி ஏற்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அதிகாரிகளும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்தனர்.
Next Story