தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல அனைத்து துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது- மு.க.ஸ்டாலின்
- வேளாண்மையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்று சொல்லுமளவுக்கான விழா இது.
- உழவர்களின் கருத்து, விருப்பத்தை கேட்டு செயல்படும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் திருவிழா நடைபெறுகிறது. வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர், உழவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேளாண் வணிகத் திருவிழா உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.
* தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது.
* வேளாண்மையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்று சொல்லுமளவுக்கான விழா இது.
* விவசாயிகளுக்கு வேளாண் வணிக வாய்ப்புகளை தெரிந்து கொள்ளும் தளமாக உள்ளது.
* விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.
* வேளாண் அதிகரிப்பதுடன் உழவர்களின் வாழ்வும் உயர வேண்டும்.
* வேளாண் துறை என்ற பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றி அறிவித்தது தி.மு.க. அரசு.
* உழவர்களின் கருத்து, விருப்பத்தை கேட்டு செயல்படும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.