தமிழ்நாடு செய்திகள்

பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் - மு.க.ஸ்டாலின்
- தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் குறித்த நாளில் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது.
- 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்துள்ளோம்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் திருவிழா நடைபெறுகிறது. வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர், உழவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேளாண் வணிகத் திருவிழா உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் குறித்த நாளில் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது.
* உழவர்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் திட்டங்களை அறிவிக்கிறோம்.
* தமிழகத்தில் நெல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
* இந்த ஆண்டில் மட்டும் 5.66 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட 1 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
* ஆக்கப்பூர்வமாக செயல்படுவதால் தான் கடந்த 4 ஆண்டுகளில் 456 மெட்ரிக் டன் லட்சம் உணவு உற்பத்தியை எட்டி உள்ளோம்.
* 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்துள்ளோம்.
* விவசாயிகளை தேடி சென்று அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முகாம்கள் நடத்துகிறோம்.
* பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்.
* எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் 2-ம் இடத்தில் உள்ளது.
* வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.
* தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமங்களும் வளர்ச்சி அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.