தமிழ்நாடு செய்திகள்

டி.ஆர்.பாலு மனைவி மறைவு- எம்.பி. கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல்
- டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
- கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
தி.மு.க. பொருளாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களாக தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எம்.பி. அவரது வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மகன்கள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செல்வம், தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story