தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதா சொன்னதை மறந்துவிட்டு ஒரு பொருந்தா கூட்டணியை அமைச்சிக்கிட்டு.., EPS-யை விமர்சித்த விஜய்
- ஜெயலலிதா சொன்ன விசயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு, ஒரு பொருந்தா கூட்டணியை அமைச்சிக்கிட்டு,
- தமிழக நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என சொல்கிறார்களே, அவர்கள் போன்று ஒருபோதும் இருக்க மாட்டோம்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நாமக்கலில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் ஏற்கனவே சொன்னதைத்தான் சொல்கிறேன். ஒன்று, பாசிச பாஜக உடன் எப்போதும் ஒத்துப்போக மாட்டோம். 2ஆவது திமுக போன்று பாஜக உடன் மறைமுக கூட்டணியாக இருக்கமாட்டோம்.
3ஆவது மூச்சுக்கு முன்னூறு முறை அம்மா அம்மா எனச் சொல்லிக்கிட்டு, ஜெயலலிதா சொன்ன விசயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு, ஒரு பொருந்தா கூட்டணியை அமைச்சிக்கிட்டு, தமிழக நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என சொல்கிறார்களே, அவர்கள் போன்று ஒருபோதும் இருக்க மாட்டோம்.
தெரியாமல்தான் கேட்கிறேன். இந்த பாஜக அரசு தமிழ்நாட்டு அரசுக்கு என்ன செஞ்சிட்டாங்க. நீட் தேர்வை ஒழிச்சிட்டாங்களா? கல்வி நிதியை முழுமையாக கொடுத்திட்டாங்களா? தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து விசயங்களையும் செஞ்சிட்டாங்களா?. அப்புறம் எதற்கு இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று நான் கேட்கல., புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கூட்டு, பொரியல், அப்பளம் என எதாவது கிண்டிகிடட்டும். நமக்கு எதுக்கு.
இவ்வாறு விஜய் பேசினார்.