தமிழ்நாடு செய்திகள்

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: வட்டாட்சியர் இடமாற்றம்
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கவனக்குறைவாக இருந்ததாக 7 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
Next Story