தமிழ்நாடு செய்திகள்

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்- சீமான்
- மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
- மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், விஜயின் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்," விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" என்று கூறினார்.
மேலும் சீமான் கூறியதாவது:- நான் இப்போது மக்களை சந்திக்கிறேன். எந்த போராட்டத்தில் நான் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன்.
மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
மக்களை சந்திக்கிறது என்பது ரோடு ஷோ நடத்துறது இல்ல. கூட்டி வெச்சு பேசிட்டு போறது. மக்களை சந்திக்கிறது என்றால் மக்களின் பிரச்சனைகளை மக்களுக்காக மக்களோடு நிக்கிறது தான் மக்களை சந்திக்கிறது.
அப்படி சந்திக்கிறீர்களா? மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.
இது வேட்டையாட வர சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.