தமிழ்நாடு செய்திகள்

தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண் நாமக்கல்..!- த.வெ.க. தலைவர் விஜய்
- தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.
- நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்கம்.
தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாமக்கல்லில் தனது பிரச்சார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடங்கினார்.
அப்போது, தொண்டர்களிடம் அனைவரும் சாப்பீட்டீர்களா என கேட்ட விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:-
லாரி பாடி கட்டும் தொழிலில் இருந்து அதிக தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல். முட்டையின் உலகமே நாமக்கல் தான்.
சத்தான உணவு முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல. தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.
தமிழக என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்கம்.
பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுத்த முன்னாள் முதல்வர் சுப்பராயன் பிறந்த மண் நாமக்கல்.
நாமக்கல்லுக்கு அது செய்வோம் இது செய்வோம் என சொன்னார்களே? செய்தார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.