உலகம்

ஸ்பெயின் தீவு அருகே புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு
- ஆப்பிரிக்காவில் இருந்த ஐரோப்பிய பகுதிக்கு செல்ல ஸ்பெயின் தீவுக்கூட்டங்களை முக்கிய வழியாக பயன்படுத்துகின்றனர்.
- அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
மொரோக்கா அருகே உள்ள ஸ்பெயினின் கேனரி தீவுக்கூட்டங்களின் துறைமுகத்தை நோக்கி சிறிய படகில் புலம்பெயர்ந்த ஒரு கும்பல் வந்து கொண்டிருந்தது. இந்த கும்பல் வந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் 4 பெண்கள், 3 சிறுமிகள் என 7 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிறிய படகில் 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தது விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் மீட்புப்படை அதிகாரிகள் பெரும்பாலனவரை காப்பாற்றியுள்ளனர். இந்த விபத்து கரையில் இருந்து 9 கி.மீ. தொலைவில் நடந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய பகுதிகளுக்கு சட்டவிரோதமாக புலம்பெயரக் கூடியவர்கள் ஸ்பெயின் தீவுக்கூட்டம் கடல்வழியை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் ரப்பர் படகு மற்றும் சிறிய வகையில் படகு மூலம் ஆபத்தான நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும்போது இந்த விபத்தை சந்திக்கிறார்கள். இந்த விபத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.