உலகம்

தென்கொரியா முன்னாள் அதிபர் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு
- முன்னாள் அதிபர் மனைவி மீது பரிசு பொருள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
- இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
சியோல்:
தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ தனது கணவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிசு பொருட்கள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தென் கொரியா முன்னாள் அதிபரின் மனைவி கிம் கியோன் ஹீ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் இது தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையின் இறுதியில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
Next Story