உலகம்

அதிபர் டிரம்பை எப்படி கையாள்வது என மோடிக்கு நேரில் சென்று சொல்லித் தருவேன் - இஸ்ரேல் பிரதமர்
- பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்.
- அந்த விஷயங்களை நான் நேரில் கூறுவேன், பொதுவில் அல்ல.
இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் மேலும் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதுகுறித்து கருத்து தெரிவித்தார். இந்த வரிவிதிப்பு பற்றி இருநாடுகளும் நல்ல முடிவுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு வருகை தந்த இந்திய பத்திரிகையாளர்கள் குழுவிடம் பேசிய நேதன்யாகு, "பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்.
டிரம்புடன் கையாள்வது குறித்து மோடிக்கு சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன். இருப்பினும், அந்த விஷயங்களை நான் நேரில் கூறுவேன், பொதுவில் அல்ல" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "நான் விரைவில் இந்தியாவுக்கு வர விரும்புகிறேன், உளவுத்துறை, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட துறைகளில் இந்தியா-இஸ்ரேல் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்தார்.