உலகம்

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்கினால், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும்: நேதன்யாகு
- லெபனான் ஐந்து மலைப் பகுதிகளை இஸ்ரேல் தன் கைவசம் வைத்துள்ளது.
- ஹிஸ்புல்லாவை ஆயுதமில்லாத நிராயுதபாணியாக்க லெபனான் அமைச்சரவை ஒப்புதல்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு லெபனானில் உள்ள ஆயுதமேந்திய குழு இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தை குவித்துள்ளது. ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லெபனானை சேர்ந்த பலன் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் இந்த மாதம் தொடக்கத்தில் ஹிஸ்புல்லாவை ஆயுதம் இல்லாத குழுவாக்க லெபனான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை லெபனான் ராணுவம் மேற்கொள்ள வேண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ராணுவம் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகிறது. இந்த நிலையில் லெபனான் அமைச்சரவை முடிவை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஏந்தவில்லை என்றால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் லெபனானில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.