உலகம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது ஹமாஸின் அட்டூழியங்களுக்கு கொடுக்கும் வெகுமதி - டிரம்ப்
- ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.
- சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.
தொடர்ந்து மோதலைத் தூண்டுவது போல, இந்த அமைப்பில் சிலர் ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முற்படுகிறார்கள்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும். இது அக்டோபர் 7 உட்பட இந்த பயங்கரமான அட்டூழியங்களுக்கான வெகுமதியாக இருக்கும்.
அமைதியை விரும்புபவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய குரல் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அண்மையில் அறிவித்த நிலையில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
தொடர்ந்து சட்டவிரோத குடியேற்றம் குறித்து பேசிய டிரம்ப்,சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கிறது.
அவர்களை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது" என்று தெரிவித்தார்.