உலகம்

தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
- தென்கொரியா அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த டிசம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார்.
- இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சியோல்:
தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஒரே நாளில் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. இதனால் யூன் சுக் இயோல் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும், அவர்மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்டவை பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். 52 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். புதிய அதிபராக லீ ஜே மியுங் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளை அழிக்க முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் முயன்றதாக புகார்கள் எழுந்தன.
சியோல் கோர்ட்டில் இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து யூன் சுக் இயோல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.