உலகம்

ஸ்பெயினில் பரவும் காட்டுத்தீ: ஒன்றரை லட்சம் ஏக்கர் எரிந்து நாசம்
- வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.
- சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன.
மாட்ரிட்:
காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.
அதன்படி, ஸ்பெயினின் மேற்கு பிராந்தியமான கலீசியா, காஸ்டில் உள்ளிட்ட 14 இடங்களில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1½ லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. எனவே ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story