என் மலர்

    உலகம்

    டிக் டாக் தடை நீக்கமா? - ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டிரம்ப்
    X

    டிக் டாக் தடை நீக்கமா? - ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டிரம்ப்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகிறது.
    • டிக் டாக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த முடிவு

    டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.

    சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஆனால் டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை தற்போது வரை அதிபர் டிரம்ப் தொடர்ந்து நீட்டிப்பு செய்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீண்டும் செயல்படும் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். டிக் டாக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    17 கோடி அமெரிக்க பயனர்களைக் கொண்ட டிக்டாக், கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றிபெற உதவியதாக டிரம்ப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×