உலகம்

ரஃபேல் இருக்க F35 எதற்கு?.. பிரான்ஸ் போர் விமானங்களை வாங்க அதிபர் மேக்ரான் வலியுறுத்தல்
- 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
- அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.
ரஃபேல் போர் விமானம் குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.
"ரஃபேல் இஸ் காலிங்" என்று அதன் படத்துடன் மேக்ரான் தனது எக்ஸ் பக்கத்தில் "நமது ஐரோப்பாவைப் பாதுகாப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், இராணுவ தளவாடங்களுக்கு அமெரிக்க உற்பத்தியை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று மேக்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்த அமெரிக்க போர் விமானங்களை வாங்கி பயன்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2021 ஆம் ஆண்டில் பின்லாந்து 64 விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியது.
இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேலுடனான மோதலில் ஈரான், F35 போர் விமானங்களை வீழ்த்தியதாக தகவல் வெளியானது. இதனால் அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரஃபேல் விமானங்களை மேக்ரான் ஐரோப்பிய நாடுகளிடம் விளம்பரப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மையில் நடந்த மோதலின்போது இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.