நானி நடிப்பில் உருவாகி வரும் 'தி பாரடைஸ்' படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், 'தி பாரடைஸ்' படத்தில் SHIKANJA MAALIK என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் மோகன் பாபுவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியான போஸ்டரில் நடிகர் மோகன் பாபு, சட்டை அணியாமல் ரத்தத்தில் நனைந்த கையுடன், ஒரு சுருட்டு மற்றும் கருப்பு கண்ணாடியை அணிந்த படி தனது பயங்கரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளார். போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், ஆக்சன் பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.