என் மலர்

    நீங்கள் தேடியது "Varalaxmi Sarathkumar"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
    • இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர்.

    நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

    இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார்.

    இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படம் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக பணியாற்ற வரலட்சுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண் போட்டியாளர் சிறிய வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வேதனைகளை பகிர்ந்துகொண்டார்.
    • உங்கள் பிள்ளைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' பற்றி கண்டிப்பாக சொல்லிக்கொடுங்கள்.

    முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். கடந்த ஆண்டு தொழில் அதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    வரலட்சுமி, தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நடன நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று இருக்கிறார். நடனம் ஆடுவதில் வல்லவரான வரலட்சுமி, போட்டியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

    இதற்கிடையில் பெண் போட்டியாளர் சிறிய வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வேதனைகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அந்த சம்பவத்தை கேட்டு வரலட்சுமியும் கண்கலங்கி போனார்.

    அவர் பேசும்போது, ''நானும் இந்த கொடுமைகளை அனுபவித்துள்ளேன். என் அப்பா, அம்மா இருவருமே தொழிலில் பிசியாக இருந்தார்கள். இதனால் அக்கம் பக்கத்து வீடுகளில் என்னை பார்த்துக்கொள்ளுமாறு கூறி அங்கே என்னை விட்டு சென்றுவிடுவார்கள்.

    6 பேர் வரை என்னை சிறுவயதில் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். எனவே அந்த பாதிப்பின் தன்மையை என்னால் உணரமுடியும். எனக்கு குழந்தைகள் இல்லை. ஆனாலும் எல்லா பெற்றோருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் பிள்ளைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' பற்றி கண்டிப்பாக சொல்லிக்கொடுங்கள்'', என்று குறிப்பிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார்.
    • இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

    'போடா போடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான 'தாரைதப்பட்டை' படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி சரத்குமார், 'விக்ரம் வேதா', 'மாரி-2', 'கன்னிராசி', 'பாம்பன்', ' நீயா-2', 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', 'மிஸ்டர் சந்திரமௌலி', ' சண்டக்கோழி-2', 'சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார்.


    இந்நிலையில், நடிகை வரலட்சுமி தனது பயத்தை முறியத்து பைக் ஓட்டி கற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாம் குழந்தையாக மற்றும் பதின் வயதில் இருக்கும் போது பைக் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை. சில காரணங்களால் பைக் ஓட்டுவதில் எனக்கு மனதளவில் தடை ஏற்பட்டது. ஆனால், தற்போது அந்த பயத்தைப் போக்க இது நேரம் என்று முடிவு செய்துவிட்டேன்.


    அதனால், கடந்த வாரம் பைக் ஓட்டுவதன் முதல் படிநிலையான சைக்கிள், ஸ்கூட்டி, புல்லட் போன்ற வாகனங்களில் இருந்து தொடங்கினேன். கொஞ்சம் வருத்தப்பட்டேன் ஆனால், இது அனைத்தும் உங்கள் பயத்தை போக்குவதற்காக செய்வது. நாம் விழுந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி எழுந்தோம் என்பதே முக்கியம் " என்று பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரலட்சுமியின் தந்தை சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார்.
    • நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக சில செய்திகள் தீயாக பரவின.

    சமீபத்தில் நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இதனையடுத்து அவரது நிச்சயதார்த்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அச்சமயத்தில் தன்னைப் பற்றி வரும் அவதூறு கருத்துக்களுக்கு வரலட்சுமி சரத்குமார் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டே வந்தார்.

    இந்நிலையில் வரலட்சுமியின் தந்தை சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார். இதனையடுத்து, நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக சில செய்திகள் தீயாக பரவின. அதன் காரணமாகதான் சரத்குமார் பாஜகவில் இணைந்தார் என்றும் வதந்திகள் கிளம்பியது.

    இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,

    நமது ஊடகங்களில் பழைய போலிச்செய்திகளை பரப்புவதை விட வேறு எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பிரபலங்களிடம் குறைகளை கண்டறிவதை நிறுத்துங்கள். நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம். அதே போல் உங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்யக்கூடாது.

    உண்மையிலேயே நீங்கள் கவனிப்பதற்கு ஆயிரம் பிரச்சினைகள் இங்கு இருக்கிறது. எங்களது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்னை பற்றிய அவதூறுகள்தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம்
    • மே 3, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

    இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

    இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

     

    படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர்.

    எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, தான் நடித்துள்ள ஒரு படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். #VaralaxmiSarathkumar #VelvetNagaram
    ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. 

    தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’, ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    இதில் வெல்வெட் நகரம் படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார்.



    தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #VaralaxmiSarathkumar #VelvetNagaram
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார். #VelvetNagaram
    ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. 

    தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் 62-வது படம், ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    இப்படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்க இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார்.



    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. #VelvetNagaram
    ×