என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 18 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
    • பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதலமைச்சரால் 18.11.2023 அன்று சட்டசபையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந்தேதியன்று பிறப்பித்த தீர்ப்பின்படி, அந்த மசோதாக்களுக்கு 18.11.2023 அன்றே ஒப்புதல் பெறப்பட்டதாக கருதப்படுகிறது.

    அந்த பல்கலைக்கழக சட்டங்கள் மூலம் 18 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    மேலும், மாற்றுத்திறன் அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம்-2016-ன் (மத்திய சட்டம்) 3-ம் பிரிவின்படி, பல்கலைக்கழகங்களின் அதிகார அமைப்புகளில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவதற்கு, காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான தகுதியின்மையை நீக்குவதற்கு, சில பல்கலைக்கழகச் சட்டங்களில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும் அவர்கள் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியின்மையை நீக்க முடிவு செய்து உள்ளது.

    மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மசோதா இன்று அவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியானது பாகுபலி திரைப்படம்.
    • பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்தது.

    2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதனால் படத்தை ரீரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் இணையத்தில் சில மாதங்களாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

     

    இதற்கு தற்பொழுது பதில் கூறும் வகையில் படக்குழு பாகுபலி பாகம் 1 திரைப்படத்தை இந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் வெளிவிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இப்படம் ரீரிலீஸ்-லும் மாபெரும் வெற்றியை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
    • தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    மதுரை:

    மதுரை கே.கே. நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் பயின்று வருகின்றனர்.

    இன்று காலை பள்ளியில் படிக்கும் ஆருத்ரா என்கிற 4 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதன் அருகிலேயே தண்ணீர் தொட்டி உள்ளது. போதிய பாதுகாப்பின்றி தண்ணீர் தொட்டி திறந்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆருத்ரா ஆபத்தை உணராமல் அதன் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்தார். இதுகுறித்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது தொட்டி ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் நிரம்பி இருந்ததாலும் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமி ஆருத்ரா பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர், 4 ஆசிரியர்கள் கைது செய்தனர்.

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட மழலையர் பள்ளி செயல்பட்டது குறித்து தெரியவில்லை. விதிகளை மீறி செயல்பட்டதும், குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!
    • போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்றும் இன்று இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading.... அதில் இன்னும் சாதனைகள் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கள்ளச்சாராய ஆட்சிக்கு!

    கள்ளக்குறிச்சியே சாட்சி!

    சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!

    பெண்கள் பாதுகாப்பின்மைக்கு

    அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி!

    போதைப் பொருள் கடத்தலுக்கு

    திமுக அயலக அணியே சாட்சி!

    போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!

    ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி!

    Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure.

    இதில் இன்று Version 2.0 Loading ஆம்!

    அ.தி.மு.க. ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி!

    2026-ல் ஒரே version தான் - அது அ.தி.மு.க. version தான்!

    மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin… என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி என்று கூறியுள்ளார். 



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இந்திய உளவுப்படை கண்காணித்த படி உள்ளது.
    • பாகிஸ்தான் மீது சில பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    காஷ்மீரில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். இதில் 27 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கம்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறையின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

    இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. எந்த நேரத்திலும் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று இரவு பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இந்திய உளவுப்படை கண்காணித்த படி உள்ளது. பயங்கரவாதிகள் காஷ்மீரில் இருக்கும் தங்களது சிலிப்பர் செல் ஆதரவாளர்களுடன் பேசி வருவதையும் உளவுத் துறையினர் இடைமறித்து கேட்டு தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதனால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தான் மீது சில பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மொழிப்பற்று, இனப்பற்று, சாதி மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை மக்களின் உள்ளங்களில் வளர்த்தெடுத்தவர் கவிஞர் பாரதிதாசன்.
    • புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    "எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்,

    மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

    என்று தமிழ் மொழியின் பெருமைகளை முழங்கி, மொழிப்பற்று, இனப்பற்று, சாதி மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை மக்களின் உள்ளங்களில் வளர்த்தெடுத்து, தன் வாழ்நாள் முழுவதும் தமிழை உயிருக்கு நிகராக கருதி தொண்டாற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்டனை விகிதம் 2 சதவிகிதம் கூட இல்லை என்பதை விட, அமலாக்கத்துறைக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது.
    • அமலாக்கத்துறையின் நோக்கமே எதிர்கட்சிகளை பழிவாங்குவற்குத் தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள். இந்தப் பின்னணியில் அமலாக்கத்துறை தொடுக்கிற வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்க்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகின்றன. இதில் தண்டனை விகிதம் 2 சதவிகிதம் கூட இல்லை என்பதை விட, அமலாக்கத்துறைக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதன்மூலம் அமலாக்கத்துறையின் நோக்கமே எதிர்கட்சிகளை பழிவாங்குவற்குத் தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

    மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பா.ஜ.க. கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில் டெல்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பது டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

    சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

    படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றி பல பிரபல இயக்குநர்கள் பாராட்டி புகழ்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசினர். திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சசிகுமார் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

    "2010 ஆம் ஆண்டு நீங்கள் ஒரு பீரயட் கதையான ராஜா ராணி கதையை வைத்து இருந்தீங்க. அதனை சூர்யா மற்றும் விஜயிடம் சொன்னீங்க. அதுக்கு அப்பறம் பெரிய கேப் ஆயிடுச்சு இன்னமும் அந்த கதைய வச்சுருகீங்களா?" என தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு அவர் " கதை இன்னும் அப்படியே இருக்குது சார். கண்டிப்பா அந்த படத்த நான் இயக்குவேன். கதைக்கான கதாநாயகனை அது தேர்வு செய்யனும். இந்த படத்த இயக்குவதுக்கு முன்னாடி இன்னொரு ஒரு கிராமத்துல நடக்குற மாதிரி பீரியட் திரைப்படம் இயக்கப்போறேன். அதுக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த வருஷ கடைசியில் அல்லது அடுத்தாண்டு ஜனவரி அப்படத்தோட ஷூட்டிங் பணிகள் தொடங்கிடுவேன்" என கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 வயதில் இருந்தே நாள் ஒன்றுக்கு 600 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார்.
    • டோனி உலக கோப்பையை வென்ற ஆண்டில் (2011) தான் அவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வைபவ் சூர்யவன்ஷி 2011-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி பீகார் மாநிலம் சமஸ்கிபூர் மாவட்டம் தாஜ்பூர் கிராமத்தில் பிறந்தார். தலைநகர் பாட்னாவில் இருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் இருக்கிறது.

    தனது இளம் வயதில் பீகார் அணிக்கு ரஞ்சி டிராபியில் அறிமுகம் ஆனார். அவருக்கு அப்போது 12 வயதாகும். முதல் தர போட்டியில் விளையாடியதன் மூலம் ஐ.பி.எல்.லில் ஆட தகுதி பெற்றார்.

    13 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஐ.பி.எல்.லில் ரூ.1.1 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. தற்போது தனது 14 வயதில் சதம் அடித்து சூர்யவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார்.

    சூர்யவன்ஷியின் கிரிக்கெட் கனவை நனவாக்குவதற்காக அவரது தந்தை சஞ்சீவ் விவசாய நிலத்தை விற்றுள்ளார். 10 வயதில் இருந்தே நாள் ஒன்றுக்கு 600 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். 16 முதல் 17 வயதுடைய பந்து வீச்சாளர்களை அவர் எதிர்கொண்டு விளையாடினார். மகனுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அவரது தந்தை வழங்கினார். கடினமான உழைப்புக்கு ஏற்ற பலன் தற்போது கிடைத்திருக்கிறது. மிக இளம் வயதில் சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    ஷர்துல் தாக்கூருக்கு எதிரான முதல் பந்தில் சிக்சர் அடித்து தனது ஐ.பி.எல்.லில் வாழ்க்கையை அவர் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் போற்றும் நபராக வைபவ் சூர்யவன்ஷி உள்ளார். சிறிய கிராமத்தில் இருந்து வந்து ஐ.பி.எல்.லில் முத்திரை பதித்துள்ளார்.

    டோனி உலக கோப்பையை வென்ற ஆண்டில் (2011) தான் அவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இ-மெயில் மூலம் தகவல் வந்ததை தொடர்ந்து தன்வந்திரி நிலைய காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
    • கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    புதுவையில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    கடந்த 19-ந்தேதி முதலமைச்சர் ரங்கசாமி வீடு மற்றும் தனியார் நட்சத்திர ஓட்டல்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    முதலமைச்சர் ரங்கசாமி வீடு மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மூலம் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். 2 மணி நேரம் சோதனை நடத்தியும் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது புரளி என தெரிய வந்தது.

    இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    இ-மெயில் மூலம் தகவல் வந்ததை தொடர்ந்து தன்வந்திரி நிலைய காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ×