சினிமா செய்திகள்
Baahubali: The Epic திரைப்படம் டால்பி தொழில்நுட்பத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
- பாகுபலி: தி எபிக் அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.
- இப்படத்தை படக்குழு ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடுகின்றனர்.
பிரபாஸ் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. இந்த படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு பாகத்தையும் ஒன்றாக்கி சில காட்சிகளை நீக்கி ஒரே பாகமாக பாகுபலி: தி எபிக் என்று புதிய பதிப்பாக 2025 அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டம் மற்றும் திரை அனுபவத்தை தருவதற்காக படத்தை படக்குழு ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடுகின்றனர்.
மேலும், பாகுபலி: தி எபிக் திரைப்படம் டால்பி சினிமாவில் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.