உள்ளூர் செய்திகள்

இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
- கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- மாடுகளின் உரிமையாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் அரிய நாச்சி அம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்திற்கு 12 மைல் தூரமும், சின்ன மாடு பந்தயத்திற்கு 8 மைல் தூரமும் போட்டி நடந்தது. பெரிய மாடு மற்றும் சின்ன மாடு பந்தயத்தில் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
இதில் பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசை விளாத்திகுளம் வீர ஜோதி என்பவரது மாடும், 2-வது பரிசை மதுரை மாவட்டம் திருப்பாலை விஷால் என்பவரது மாடும், 3-ம் பரிசை கே.வேப்பங்குளம் நல்லதேவர் என்பவரது மாடும், 4-ம் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடும் வென்றது.
சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசை சுரேஷ்குமார் என்பவரது மாடும், 2-ம் பரிசை ராஜேந்திரன் என்பவரது மாடும், 3-ம் பரிசை பூலாங்கல் மந்திரமூர்த்தி என்பவரது மாடும், 4-ம் பரிசை மேலச் செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி மாடும் பெற்றன.
மாடுகளின் உரிமை யாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடு களை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.