கிரிக்கெட் (Cricket)

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐ.சி.சி
- சமீபகாலமாக அமெரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.
- அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது.
துபாய்:
சமீபகாலமாக அமெரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பைச் செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இருப்பினும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, இலங்கையில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க பங்கேற்பதில் சிக்கல் இருக்காது.
Next Story