கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் விலகல்
- முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 2-ம் தேதி தொடங்குகிறது.
- ஷமார் ஜோசப் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 2-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷமார் ஜோசப் இதுவரை 11 டெஸ்ட் போட்டியில் விளையாடி 51 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
ஷமார் ஜோசப் விலகலை எக்ஸ் தளத்தில் அறிவித்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அவருக்கு பதிலாக ஜோஹன் லெய்ன் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அறிமுக வீரராக சேர்க்கப்பட்டு இருக்கும் 22 வயதான வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான ஜோஹன் லெய்ன் 19 முதல் தர போட்டியில் ஆடி 495 ரன்னும், 66 விக்கெட்டும் எடுத்துள்ளார்.