கிரிக்கெட் (Cricket)

தனி ஆளாகப் போராடிய ரிக்கல்டன்: பாய்ந்து பிடித்த மேக்ஸ்வெல் கேட்ச்-வைரலாகும் வீடியோ
- ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.
டார்வின்:
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மபாகா 4 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து இறங்கிய தென் ஆப்பிரிக்காவில் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தென் ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் அணியின் வெற்றிக்காகப் போராடினார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன் தேவைப்பட்ட நிலையில் ரிக்கல்டன் இருந்ததால் அந்த அணிக்கு வெற்றி மேல் நம்பிக்கை இருந்தது.
கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் எதுவும் அடிக்கவில்லை. 2-வது பந்தை ரிக்கல்டன் தூக்கி அடித்தார். சிக்சர் செல்லும் என நினைத்த நிலையில், பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மேக்ஸ்வெல் அதனை அந்தரத்தில் பாய்ந்து பிடித்தார். தரையில் கால் படும் முன் பந்தை பவுண்டரி எல்லைக்கு உள்ளே தூக்கி வீசிய அவர், தரை இறங்கியதும் பவுண்டரிக்கு வெளியே இருந்து தாவி அற்புதமாக கேட்ச் பிடித்தார். இது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.