கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 135 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. முகமது ஹாரிஸ் 31 ரன்னும், முகமது நவாச் 25 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஷமிம் ஹொசைன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். சைப் ஹசன் 18 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Next Story