கிரிக்கெட் (Cricket)

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்
- ஸ்மிருதி மந்தனா 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
- பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3 இடம் சரிந்து 7வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான வீராங்கனைகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.
அதன்படி, பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (735 புள்ளி) 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் (731 புள்ளி) 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (725 புள்ளி) உள்ளார்.
ஹர்மன்பிரீத் கவுர் 12வது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் மாற்றமில்லை. இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (795 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (725 புள்ளி) 2ம் இடத்திலும், மேஹன் ஸ்கட் (691 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் தீப்தி சர்மா 3 இடங்கள் சரிந்து 7வது இடத்தில் உள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா தொடர்ந்து 4வது இடத்திலேயே நீடிக்கிறார்.