டென்னிஸ்

கொரியா ஓபன் டென்னிஸ்: அதிரடியாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்
- கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.
- இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றார்.
சியோல்:
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 6- 1 என எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட இகா ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி 7-6 (7-3) என 2வது செட்டை கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இகா ஸ்வியாடெக் 7-5 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
Next Story