என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலங்குடி அருகே 2-வது நாளாக பதட்டம் நீடிப்பு.
    • சாமியை பல்லக்கில் வைத்து தூக்கி வருவது தொடர்பாக மீண்டும் மோதல்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த லோகநாயகி அம்பாள் உடனுறை பாலபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்துவது சம்பந்தமாக 2 சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை அம்பாள் திருவீதி உலா நடைபெற இருந்த நிலையில் சாமியை பல்லக்கில் வைத்து தூக்கி வருவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

    இதனை தடுக்க சென்ற ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


    இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதை கண்டித்து குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த இன்ஸ்பெக்டரை பார்த்து நலம் விசாரித்தனர்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கோவிலூரைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மோதல் காரணமாக இன்று 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கோவிலில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
    • மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை யை பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இருக்கும். அதிகளவு நீர் ஓடும் போது அருவியில் குளித்து மகிழவும், ஆற்றில் பரிசல் பயணம் மேற் கொள்ளவும் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவர்.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநி லங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்வர். தற்போது, காவிரி நீர்ப் பிடிப்பு பகுதி களில் போதிய மழை யில்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று 500 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 300 கனஅடியாக குறைந்து வந்தது.

    இதனால், காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடை கலாகவும் காட்சியளிக்கிறது.

    ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    கர்நாடக அணிகளில் இருந்து உபரி நீர் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வெறும் பாறை களாகவே காட்சியளிக்கி ன்றன. அருவிகளில் கொட்டும் தண்ணீரின் வேகமும் சற்று குறைந்து ள்ளது.

    கோடை காலம் துவங்கும் முன்பே கர்நாடகாவில் மழை குறைந்ததாலும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    நீர்வரத்து மேலும் குறைந்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்கான தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கும் நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் கோடை சுற்றுலாப் இந்த ஆண்டு கடுமையாக பாதிப்பு நிலை ஏற்படும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 32 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • கருப்பு வெறுப்பாக இருக்கிறது. காவியை நோக்கி போகிறார்.

    சென்னை:

    சென்னை மாவட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் பால கங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. வாக்களிக்க செல்லும்போது பட்டிலில் பலரது பெயர் இல்லாததால் ஓட்டுபோட முடியவில்லை.

    வாக்காளர்களை எளிதில் நீக்கும் நடைமுறை உள்ளது. அப்படி இருக்கக் கூடாது. நீக்குவதற்கு முன்பு பலமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    சென்னையில் 32 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. யார் யாருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டுள்ளோம். அந்த பட்டியலை தருவதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

    சட்டசபையில் கமிஷனர் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அரசை துதிபாட சொன்னால் கவர்னர் எப்படி துதி பாடுவார்?

    முதலமைச்சருக்கு முன்பு கருப்பு பிடிக்கும். ஆனால் இப்போது கருப்பு பிடிக்கவில்லை. கருப்பு அவருக்கு வெறுப்பாக இருக்கிறது. காவியை நோக்கி போகிறார்.

    தற்போது மினி எமர்ஜென்சி நடக்கிறது. போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரே வெடித்து சிதறுகிறார்கள். நெல்லிக்காய் மூட்டை போல விரைவில் சிதறுவார்கள். அண்ணா பல்கலைக் கழக விவகாரத்திற்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. சட்ட மன்றத்தில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்டவாளத்தின் நடுவே 10 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் தண்டவாளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் தினமும் மாலை 6.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படுகிறது. பின்னர் கடையநல்லூர், பாம்புகோவில், ஸ்ரீவில்லி புத்தூர் வழியாக சென்னைக்கு சென்றடைகிறது.

    நேற்று மாலை வழக்கம்போல் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. 6.50 மணிக்கு கடையநல்லூர் ரெயில் நிலையத்திற்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது.

    இந்த ரெயில் கடையநல்லூர்-பாம்புகோவில் ரெயில் நிலையங்களுக்கு இடையே போகநல்லூர் பகுதியில் சென்றபோது அங்கு தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.

    இதனைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் சுதாரித்துக்கொண்டு ரெயிலை மெதுவாக இயக்கியவாறு அதனை நிறுத்தினார். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்களை அகற்றினர். பின்னர் மீண்டும் அங்கிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது.

    ஏற்கனவே கடந்த மாதமும் சங்கனாப்பேரி பகுதியில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பதற்காக அவர்கள் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தது தெரிய வந்தது.

    கடந்த ஒரு மாதமாக ரெயில்வே போலீசார் கடையநல்லூரில் இருந்து பாம்பு கோவில் சந்தை வரை தண்டவாளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு சென்றனர். இந்த நிலையில் தான் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    எனவே தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×