என் மலர்

    நீங்கள் தேடியது "Actor vijay Sethupathi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிக்பாஸ் பட்டத்தை வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை கிடைக்கும்.
    • பிக்பாஸ் 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.

    தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

    100 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டில் சக போட்டியாளர்களுடன் தங்கி, கொடுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் வெல்லுகிறார்.

    இதுவரை ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்–லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, சித்தப்பா சரவணனின் வெளியேற்றம், தாடி பாலாஜி சம்பவம் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றுள்ளன.

    முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.

    பிக்பாஸ் 9 ஆவது சீசனில் கலந்து கொள்ளும் நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நடிகர் சித்து, பாரதி கண்ணம்மா ஃபரினா ஆசாத், சீரியல் நடிகை ஜனனி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டி மன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் உட்பட பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

    குறிப்பாக ஹார்ட் பீட் வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்து வந்த பாடினி (அனிதா) மற்றும் கார்த்திக்குமாரின் (விஜய்) சிறு வயது காதாபாத்திரத்தில் நடித்த ரோஷனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
    • இயக்குனர் பூர் ஜெகன்நாத் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 'டிரெயின்', 'ஏஸ்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

    இதனை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும் பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் டீசர் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் பூர் ஜெகன்நாத் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்டி படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
    • விஜய் சேதுபதி கூட்டத்தில் ஒருவனாக இருந்து படிப்படியாக உயர்ந்தார்.

    ஷேன் நிகாம், செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பல்டி. இப்படத்தில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக ப்ரீதி நடிக்கிறார்.

    இப்படத்தை அறுமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். இப்படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் 26ம் தேதி வெளியாகிறது.

    இந்த படம் குறித்து சாந்தனு நேர்காணல் அளித்தார். அந்த நேர்காணலில் பேசிய அவர், "நான் எப்போதும் சாந்தனுவாக தான் இருக்கிறேன். சாந்தனு பாக்யராஜாக அல்ல. எனது அப்பாவால் தான் எனக்கு சக்கரக்கட்டி பட வாய்ப்பு கிடைத்தது. அப்படம் சரியாக போகாததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எனக்கு வரவில்லை. இதனையடுத்து எனது அப்பாவால் சித்து படம் கிடைத்தது. அடுத்த சில வருடங்களில் எதோ தவறு நடப்பதாக உணர்ந்தேன், ஆனால் அதற்குள் என்னுடைய மார்க்கெட் போய்விட்டது.

    அப்போது தான் சினிமா துறையில் யார் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தேன். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், மணிகண்டன் அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். விஜய் சேதுபதி கூட்டத்தில் ஒருவனாக இருப்பார். பின்னர் படிப்படியாக அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தார்.

    ஆனால் நானோ அடிமட்டத்தில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. பின்னர் இவர்களை பார்த்து நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மக்களோடு தொடர்புபடுத்தக்கூடிய சாமானிய மனிதனின் கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆரம்பித்தேன். அப்படி தான் தங்கம், ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்தேன். இப்போது பல்டி என்கிற படத்திலும் நடித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் .டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. ஒரு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காதலர்களை பார்த்தால் அவர்களது காதலின் முடிவு என்ன மாதிரி இருக்கும் என கவினுக்கு தோன்றுகிறது. இந்த பிரச்சனையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளனர்.

    படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதை சொல்லியாக அவரது குரலை கொடுத்துள்ளார். இதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'தலைவன் தலைவி' திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்

    'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

    இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மகாராஜா படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு இப்படம் பிளாக் பஸ்டராக அமைந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரசிகர்களை மகிழ்விக்கவே விரும்புகிறேன்.
    • ரசிகர்களின் மனநிலை தான் எனக்கு முக்கியம்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த 'தலைவன் தலைவி' படம் 'ஹிட்' அடித்தது. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெய்ன்' படத்திலும், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

    இதற்கிடையில் தன் மீதும், தனது மகன் சூர்யா மீதும் எழும் விமர்சனங்கள் குறித்து விஜய் சேதுபதி மனம் திறந்தார்.

    அவர் கூறும்போது, ''எல்லா இடத்திலும் எதிர்மறையான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை தடுக்க முடியாது. எப்படி கையாளுவது? என்பதை கற்றுக்கொள்வதே முக்கியம். நான் எந்த தவறு செய்தாலும், 'இப்படி செய்துவிட்டேனே...' என்று யோசிப்பதை விட, அடுத்து என்ன செய்யலாம்? என்பதையே யோசிக்கிறேன்.

    ரசிகர்களை மகிழ்விக்கவே விரும்புகிறேன். அதற்கு செய்யவேண்டியதை செய்கிறேன். என் மீது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள், அடுத்த படத்தில் அவற்றைத் திருத்தி கொள்வேன். ரசிகர்களின் மனநிலை தான் எனக்கு முக்கியம்'' என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
    • தொடர்ந்து பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

    தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது ஒன்பதாவது சீசனுடன் விரைவில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. 2017ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

    100 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டில் சக போட்டியாளர்களுடன் தங்கி, கொடுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் வெல்லுகிறார்.

    இதுவரை ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்–லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, சித்தப்பா சரவணனின் வெளியேற்றம், தாடி பாலாஜி சம்பவம் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றுள்ளன.

    முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

    ஜியோஸ்டார் Head of Cluster, Entertainment (South) கிருஷ்ணன் குட்டி கூறியதாவது:

    "இந்த முறை சில சமூக ஊடக பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர். இதற்கு முன்னர் நெல்சன் திலிப் குமார், அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற பிரபல இயக்குநர்கள் நிகழ்ச்சியை இயக்கிய நிலையில், இந்த சீசனை பிரவீன் மற்றும் அர்ஜூன் இயக்க உள்ளனர். மேலும், ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்கள், நேரடியாக போட்டியாளர்கள் குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்; வரவிருக்கும் ஒன்பதாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார்.

    ஒவ்வொரு சீசனிலும் புதுமை கொண்டு வரும் பிக்பாஸ், இந்த முறை எந்த வகை மாற்றங்களை ரசிகர்களுக்கு பரிசளிக்கப் போகிறது என்ற ஆர்வம் அனைவரிடமும் நிலவுகிறது.

    நிகழ்ச்சியை விரைவில் ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் காண தவறாதீர்கள்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தலைவன் தலைவி படம் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

    இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், தலைவன் தலைவி' படத்தின் வெற்றி விழாவை படக் குழுவினர் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

    இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
    • சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார்.

    நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.

    கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

    இந்நிலையில், நடிகர் கிங்காங் மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மணமக்களை நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோவை கிங்காங் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

    இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில், கடந்த மாதம் 25-ந்தேதி வெளியான 'தலைவன் தலைவி' படம் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. படம் வெளியான உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது. மேலும் தமிழ் நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனால் தலைவன் தலைவி திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக உருமாறியுள்ளது. இதனால் படக்குழு, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

    இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில், கடந்த மாதம் 25-ந்தேதி வெளியான 'தலைவன் தலைவி' படம் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. படம் வெளியான 13நாட்களில் உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது. 

    ×