என் மலர்

    நீங்கள் தேடியது "Shalini Ajithkumar"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்
    • நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், ரேஸுக்கு முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2000-ம் ஆண்டு அஜித்குமார் - ஷாலினி திருமணம் செய்துகொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

    இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித் குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

    அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில், ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் க்யூட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பூஜை ஒன்றில் அஜித்குமார் காலில் விழ ஷாலினி முயல்கிறார். அதை அஜித் வேண்டாம் என்று கூற, சுற்றி உள்ளவர்கள் காலில் விழுமாறு கூறுகிறார்கள். இதனையடுத்து ஷாலினி அஜித்குமார் காலில் விழுந்து வணங்குகிறார். உடனே அஜித்குமார் வீட்டுல போய்ட்டு நான் விழணும் என்ற கூற சிரிப்பலை எழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
    • அஜித்குமாருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையொட்டி அஜித்குமாருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், திரைத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமாருக்கு அவரது மனைவி ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இன்ஸ்டாவில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஷாலினி, அந்த பதிவில், நீங்கள் உங்கள் தொழிலை மட்டும் உருவாக்கவில்லை. நீங்கள் மக்களை சுமந்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து எல்லாவற்றையும் அருமையாக செய்துள்ளீர்கள். உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. 33 வருடங்கள் முடிந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருது பெற்ற அஜித்துக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்தனர்.
    • ஹீராவுடன் அஜித்குமார் தொடரும், காதல் கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

     ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நேற்று அஜித் குமாருக்கு இந்திய கவுரவ விருதான பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவர் வழங்கினார். விருது பெற்ற அஜித்துக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்தனர்.

    மறுபக்கம் முன்னாள் நடிகையான ஹீரா அஜித்தை பற்றி பல விஷயங்களை பற்றி பேசி அவரது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். அப்பதிவு மிகவும் வைரலானது. இதைப்பற்றி நெட்டிசன்கள் பலரும் அவர்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    ஹீரா 90 களில் முன்னணி நடிகையாவார்.பல முன்னணி இயக்குனர்கள் படத்திலும், மணி ரத்னம், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித் குமார் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    ஹீராவுடன் அஜித்குமார் தொடரும், காதல் கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்பொழுது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு ஒன்றாக காதலித்து வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பின் சில மன கசப்பு காரணங்களால் பிரிந்தனர்.

    தற்பொழுது ஹீரா அவரது பதிவில் கூறியதாவது "அஜித் குமார் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார், என் மீது பகிரங்கமாக பழி சுமத்தி சினிமாவை விட்டு போகும் படி செய்து விட்டார்" என ஹீரா சொல்லி இருப்பது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    நடிகை ஹீரா இந்த பதிவை கடந்த ஜனவரி மாதம் எழுதி இருக்கிறார். அதில் "நான் ஒரு நடிகருடன் நெருங்கிய உறவில் நீண்ட காலம் இருந்தது எல்லோருக்குமே தெரியும். கடைசியில் அந்த நடிகர் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார். ஒரு ஸ்டூடியோவுக்கு வர சொல்லி எங்களுக்கு பொதுவானவரை வைத்து இந்த விஷயத்தை சொன்னார்.

    நான் ரொம்பவும் கெஞ்சி, கதறி அழுது இது உண்மையா என கேட்டேன். அதற்கு நான் வேலைக்காரி மாதிரி இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன், அப்போதுதான் அவளை யாரும் பார்க்க மாட்டார்கள், நான் விருப்பப்பட்ட மாதிரி எந்த பெண்ணுடனும் வாழ்வேன்" என சொன்னதாக ஹீரா குற்றம் சாட்டி இருக்கிறார்.

     

    மேலும் நான் போதைப் பொருளுக்கு அடிமையானதாய் அந்த நடிகர் தவறான தகவலை பரப்பி தன்னுடைய பெயரை மக்கள் முன்னிலையில் கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

    மேலும் தனக்கு ஆபரேஷன் நடந்தது என அவர் சொல்வதெல்லாம் மக்களிடையே தனக்கு நல்ல பெயர் வர வேண்டும் என்பதற்காகத்தான்.

     

     

    அவருடைய கஷ்ட காலங்களில் நான் இரவு பகல் பாராது அவருடன் துணையாக இருந்தேன். ஆனால் கடைசியில் என்னை நிற்கதியாக விட்டுவிட்டார் என ஹீரா சொல்லி இருக்கிறார்.

     

    இதில் அவர் அஜித்தின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் சினிமாவில் காதலித்தது அஜித் தான் என்பதால் எல்லோரும் அவர் அஜித்தை பற்றி தான் பேசுகிறார் என உறுதி செய்து இருக்கிறார்கள்.

     

    இதனை ரசிகர்கள் பார்த்து சில பேர் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவை டேக் செய்து வருகின்றனர். ஆனால் இப்பதிவு எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. நடிகை ஹீரோ பதிவிட்ட இணையத்தளம் தற்பொழுது இல்லை. அதனால் மிகவும் குழப்பமான சூழல் ஏற்பட்டு வருகிறது.

    பலர் இதை அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்றனர் என பலவித கோணங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையில் என்ன நடந்தது என அஜித் சொன்னால் மட்டுமே தெரியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
    • பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

    பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.

    போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

    இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

    பிரேசில் லெஜெண்ட்ஸ் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டியை நடிகை ஷாலினி அஜித்குமார் பார்த்து ரசித்தார். பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடா முயற்சி" படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
    • அதே சமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார்.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடா முயற்சி" படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் அஜித்குமார் நடித்து வருகிறார்.

    அஜித்குமாரின் மனைவியான ஷாலினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் தருவார்.

    இந்நிலையில், எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது. தயவு செய்து யாரும் அதனை பின் தொடர் வேண்டாம் என்று ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த போலியான எக்ஸ் பக்கத்தை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    • ஸ்பெயின் வீதிகளில் அஜித்தும், ஷாலினியும் மகிழ்ச்சியுடன் உலா சென்றுள்ளனர்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்புக்கு சில காலம் இடைவெளி விடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் அஜித் தனது மனைவி ஷாலினி, மகன், மகளுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    ஸ்பெயின் வீதிகளில் அஜித்தும், ஷாலினியும் மகிழ்ச்சியுடன் உலா சென்றுள்ளனர். மேலும் அங்கு நடந்த கால்பந்து போட்டியை மகன் ஆத்விக்குடன் ஷாலினி கண்டு ரசித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஷாலினி.

    வீதியில் அவர்கள் இருவரும் நடந்து வருவதை அவரே செல்ஃபீ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நாம் இருவரும் இணைந்து இருப்பதே சிறந்த இடமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    அஜித் பைக் சுற்றுலா செல்லும் போது பேசிய வீடியோ அண்மையில் வெளியாகி மிகவும் வைரலானது. அதைத்தொடர்ந்து தற்பொழுது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2000 ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்தது அலைபாயுதே திரைப்படம்
    • ஏ.ஆர் ரஹ்மான் இசையில் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.

    2000-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷாலினி அஜித்குமார். 2000 ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அனைவரும் மனதில் இடம்பிடித்தார்.

    இப்படத்தில் அவர்களது கதாப்பாத்திரத்தின் பெயரான கார்த்திக் மற்றும் சக்தி மிகவும் பிரபலம் அடைந்தது. இப்படத்தை ரசிக்காதோர் யாரும் இருக்க முடியாது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. இன்றும் பச்சை நிறமே , யாரோ யாரோடி, சிநேகிதனே பாடல்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும், மக்கள் அன்றாட கேட்கும் பாடல்கள் லிஸ்டில் முக்கிய பங்கை வகிக்கிறது.

    சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ஷாலினி அவ்வப்போது குடும்பங்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தையும். அஜித் குமாருடன் சுற்றுலா செல்லும் போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை  பகிர்வார்.

    நேற்று அவர் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 24 ஆண்டுகளுக்கு பிறகு தன் அலைபாயுதே ஜோடியான மாதவனுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்றென்றும் புன்னகை என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்து அதை வைரலாக்கி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் அஜித்குமாரும் ஷாலினியும் 2000-ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்தனர்.
    • இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

    நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார்.

    இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது.

    மேலும் பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதை யொட்டி கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடிய ஷாலினிக்கு நடிகர் அஜித்குமார் காஸ்டலி கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

    விலை உயர்ந்த லெக்சஸ் காரை தனது மனைவி ஷாலினிக்கு அஜித்குமார் பரிசாக கொடுத்துள்ளார். லெக்சஸ் காரின் முன்பு ஷாலினி நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
    • நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது. தற்போது மூன்றாவது இடம்பிடித்துள்ள அஜித் குமார் ரேசிங் அணிக்கு அஜித் குமார் உரிமையாளராக மட்டுமே செயல்பட்டார்.

    கார் பந்தயத்தில் மூன்றாவது இடம்பிடித்த நடிகர் அஜித் குமார் ரேசிங் அணிக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அஜித் குமார் வெற்றியை கொண்டாடிய தருணங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்பொழுது மற்றொரு வீடியோவை அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அதில் துபாய் ஆட்டோடிரோமை சார்ந்த சீஃப் பிட்ஸ் இம்ரான் என்பவர் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது " இது எனக்கு ஒரு பெருமையான தருணம். 20 வருடம் ஆனது ஒரு இந்தியகொடி இந்த ரேஸ் டிரக்கில் பறப்பதற்கு. என் கனவை அஜித்குமார் நிறைவேற்றியுள்ளார். நான் மிகவும் சந்தோஷமாகவுள்ளேன். அஜித் ஒரு மிகச் சிறந்த மனிதன், நேர்மையான மனிதன் நல்ல குடும்பஸ்தன்" என்றார் . அதைத்தொடர்து பேசிய அஜித் அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறினார். அவரது நண்பர்கள், ரசிகர்கள், குடும்பம் என அனைவருக்கும் நன்றி கூறினார். அவர்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. அஜித்குமார் ரேசிங் மேலும் பல வருடங்களுக்கு இங்கு இருக்கும் . மேலும் என் மனைவி ஷாலுக்கு மிக்க நன்றி என்னை ரேசிங் ஓட்ட விட்டதற்கு."என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×