கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.
கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படக்குழு நேற்று கல்கி இரண்டாம் பாகத்திலிருந்து நடிகை தீபிகா படுகோனை நீக்கினர். இது பெரும் பேசும் பொருளாக மாறியது. தீபிகா போட்ட கண்டிஷன்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அப்படி தீபிக என்ன கண்டிஷன்களை முன்வைத்தார் பார்க்கலாம் வாங்க.
- கடந்த பாகத்தை விட இந்த பாகத்தில் 25 சதவீத ஊதிய உயர்வு
- 7 மணி நேர வேலை நேரம் அதற்கு மேல் நடிக்க மாட்டேன்.
- அவரது குழு ஆட்களான 25 நபருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் இடம் மற்றும் படப்பிடிப்பு முடியும் வரை அவர்களுக்கான ஊதியம் மற்றும் உணவு கொடுக்க வேண்டும்.
- நீண்ட நேரம் படப்பிடிப்பில் ஈடுப்பட முடியாது.
- படத்தின் லாபத்திலிருந்து பங்கு .
இதனால் தயாரிப்பு நிறுவனம் தீபிகாவை படத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதேப்போல் பிரபாஸின் ஸ்பிர்ட் படத்திலிருந்து நீக்கப்பட்டார். பிரபாச் நடிக்கும் இரண்டாவது படத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
சிலர் படத்தின் கதையை மாற்றிவிட்டார்கள், தீபிகாவை விட கமலுக்கு அடுத்த பாகத்தில் முக்கியத்துவம் இருப்பதால் அவர் விலகியுள்ளார் எனவும் கூறிவருகின்றனர்.